ட்விட்டரின் ட்விஸ்ட்ஸ்..

ட்விட்டர் பற்றிய ஒரு இன்ட்ரொ. உங்களுக்கு பேங்க்ல அக்கௌன்ட் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால்; ட்விட்டர், ஃபேஸ்புக்ல அக்கௌன்ட் இல்லையென்றால் ஒரு தீவிரவாதியாயைப்போல் பார்க்கிறார்கள். ஆகையால் வாருங்கள் உங்களை ஒரு நல்ல பிரஜையாக மாற்றுகிறேன்.

   ட்விட்டரில் அக்கௌன்ட் எப்படி தொடங்குவது என்று பார்ப்போம். அடுப்பில் சுடுத்தண்ணீர் காய்ச்சுவதுப்போல் சுலபமான ஒன்றுதான். www.twitter.com என்று அட்ரஸ் பாரில் டைப் செய்யவும். உடனே திரை வந்துவிடாது எனில் நமது நெட் ஸ்பீட் அப்படி. சற்று நேரம் பொறுத்து விரியும்.

        New to twitter? என்ற தலைப்பில் Sign up for twitter என்ற பட்டனை க்ளிக் செய்யவும். தொடர்ச்சியாய்  Join Twitter Today என்று பேஜ் ஒப்பன் ஆகும். அதில் Full name என்ற இடத்தில் உங்களின் உண்மையான பெயரை தருவதும் மாற்றி வைத்து தொடங்குவதும் உங்கள் விருப்பம். ட்விட்டரில் உள்ள வசதி என்னவென்றால் உங்களின் “Personal Identity” எதுவும் தேவையில்லை என்பதே.

         அடுத்து E-mail address கொடுக்கவும். அப்புறம் வழக்கமாக காதலன்(கள்) /காதலி(கள்) பெயர் அதாவது பாஸ்வோர்ட். இறுதியாக Username அடுத்தவரை கவரும் வண்ணமாக முட்டாள், முசுடு, என்று எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் அடுத்தவர்கள் எப்படியும் அழைக்கபோதில்லை என்று அறிவாளி என்றுக்கூட வைத்துகொள்ளலாம்.

        ஒருவழியாக முடித்தபின் Create my account என்ற  பட்டனை பிரஸ் செய்யவும். அதன்பின் ப்ரோபைல் டிசைனில் மானே, தேனே, பொன் மானேன்னு போட்டுக்கோங்க.இனிமே உங்க வாய்தாவை தொடங்கலாம்.

    நீங்கள் யாரென்று தெரியாமல் ஆனால், உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் மட்டுமே தெரியபடுத்தலாம் “படுத்தி எடுக்கலாம்”.  கொஞ்சம் நேரம் இளையராஜா பாடல்கள் கேட்டு ரிலாக்ஸ் செய்வதுப்போல். ப்ரீயா எதையவாது பேசிவிட்டு போகலாம். அதற்கென்று  அதிகமாகவும் பேச முடியாது 140 கேரக்டர்ஸ்ல முடிச்சிடனும் கண்டிஷன்ஸ் அப்பளை ஆகாத ஒரே விஷயம் மரணம் மட்டும்தான். 140 கேரக்டர்ஸ்ல முடிக்க வேண்டும் என்பதால் நன்றாக எழுதுபவர்களுக்கு சிந்தனையை தூண்டும். நிறைய எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு  நல்ல குலுக்கோஸ்.

    வெட்டியாக பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வேஸ்ட் பேப்பர் என்ன வேண்டுமானாலும் கிறுக்கிவிட்டு போகலாம். ஆனால் அதற்கான எதிர்வினை வந்தால் சந்தித்துதான் ஆகவேண்டும். ஏனேன்றால் இது சோஷியல் மீடியா. நீங்கள் தொடர்புக்கொள்ள முடியாத பிரபலங்களை ஃபாலோ செய்து அவர்களுடன் உரையாடலாம். உங்களின் ஃ ஃபாலோவ்வர்ஸ் அதிகம் ஆக ஆக நீங்களும் பிரபலம்தான். நீங்களும் பிராப்ளம் ஆக சாரி பிரபலம் ஆக  என் வாழ்த்துக்கள்!.

You may also like...

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x